Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே கூரையின் கீழ் 3 மெகா நிகழ்ச்சிகளுடன் ‘சம்மர் கார்னிவல் 2024’!

Advertiesment
ஒரே கூரையின் கீழ் 3 மெகா நிகழ்ச்சிகளுடன் ‘சம்மர் கார்னிவல் 2024’!

J.Durai

, வெள்ளி, 10 மே 2024 (14:37 IST)
சினிமா அல்லாத வேறு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்க வேண்டும், கூடவே கொளுத்தும் கோடை வெயிலையும் சமாளிக்க வேண்டும். அது போன்ற  ஒன்று தான் ‘சம்மர் கார்னிவல்'
 
ஒரே கூரையின் கீழ் மூன்று  மெகா நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த ‘சம்மர் கார்னிவல் 2024’ வரும் 12.05.2024 முதல் 24.06.2024 வரை 46 நாட்கள் காலை 11 முதல் இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது. 
 
மெகா நிகழ்ச்சி-1 
 
கலை, சிறுகதை, கதை, எழுதுதல், பேச்சு, இசை, பாடுதல், நடனம், புகைப்பட கலை, குறும்படம், சொந்தமாக தனித்தன்மையை நிரூபிக்கும் போட்டி ஆகியவை நடைபெறும் 
 
மெகா நிகழ்ச்சி-2 
 
காலை 10 மணி முதல் இரவு 11.59 வரை கோடை விருந்து.
 
மல்டி குஷன் பிராண்டட் வெஜ் மற்றும் நான்வெஜ் ஃபுட் கோர்ட்  
 
பல்வேறு தரப்பட்ட சைவ மற்றும் அசைவ டிரைவ் இன் ரெஸ்டாரண்ட்
 
மெகா நிகழ்ச்சி-3 
 
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை
வாங்க விளையாடலாம் மற்றும் விளையாட்டு காட்சிகள் 
 
இந் நிகழ்வில்  6-லிருந்து 60 வயது வரையிலானவர்களுக்கான விளையாட்டு பிரிவுகள் இதில் அடங்கி இருக்கின்றன.
 
துப்பாக்கி சுடுதல் அடிப்படையிலான விளையாட்டுகள், வில்வித்தை விளையாட்டு, குழந்தைகளுக்கான வேடிக்கை போட்டி நிகழ்ச்சி மற்றும் குடும்பங்கள், கார்ப்பரேட் விளையாடும் விளையாட்டுகள். குழந்தைகளுக்கான சவாரிகள் உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும்.
 
அது மட்டுமின்றி சிறப்பு காட்சிகளாக
ஐஸ் ஏஜ் தீம். பனிக்காட்சி, அரண்மனை தீம், ஹாரர் ஷோ, டார்க் 2 லைட் மல்டி கலர் லைட் ஷோ ஆகியவையும் இதில் அடங்கும்
 
மேலும் பார்வையாளர்கள் புத்துணர்ச்சி பெரும் விதமாக காலை 8 மணி முதல்  மாலை 5 வரை இளநீர், பனைமர தயாரிப்புகள், கரும்பு ஜூஸ், மோர், ஜிகர்தண்டா மற்றும் பிரெஷ் பழச்சாறு கடைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது
 
சிசிடிவி கேமரா, பாதுகாப்பு அலுவலர்கள், பார்க்கிங் உதவியாளர் உள்ளிட்ட வசதிகளுடன் வளாகத்திற்குள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு நேர்த்தியான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
 
இசை மற்றும் ஒளி அலங்காரத்துடன் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் விதமாக சுத்தமும் சுகாதாரமான சுற்றுப்புற சூழலில்காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை பல்வேறு விதமான பொழுதுபோக்கு மேடை நிகழ்ச்சிகளும்  சர்வதேச ஆர்டிஸ்ட் வெரைட்டி ஷோ, மனித சிலைகள், லைவ் பேண்ட், டிஜே, ஸ்டாண்ட் அப் காமெடி மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றது.
 
கட்டணத்துடன் கூடிய ராயல் முகல் கிங் டைனிங். ராயல் தமிழ் கிங் டைனிங், ஃபிரஷ் கார்டன் (VVIP) ப்ளூ (அல்ட்ரா வயலட் லைட் ஜோன் – VIP) என தனிப்பட்ட உணவு பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளது சம்மர் கார்னிவல் குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவ்வளவு சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் நீலகிரிக்கு வரலாம்: சிவ்தாஸ் மீனா