Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதாகரனும் சரண் அடைகிறார் - அவகாசம் வழங்க நீதிமன்றம் மறுப்பு

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (18:33 IST)
நீதிமன்றம் அவகாசம் வழங்க மறுத்ததையடுத்து சுதாகரனும் நீதிமன்றத்தில் விரைவில் சரண் அடைய உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் உடல் நிலை சரியில்லை எனக் கூறி, அவர்களின் வழக்கறிஞர், வாய் மொழியாக 4 வாரங்கள் அவகாசம் கேட்டார். ஆனால் அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
 
இதனையடுத்து இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ராஹர கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று மாலை 5 மணியளவில் சரணடைந்தனர். 
 
ஆனால், சுதாகரன் மட்டும் இன்னும் அங்கு சென்று சரணடையவில்லை என்ற தகவல் வெளியானது. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் சரண அடைய அவகாசம் வேண்டும் எனக் கூறி பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சுதாகரன் மனு தாக்கல் செய்துள்ளார் என்ற வெளியானது. அதன் பின் ஒரு நாள் கழித்து, அதாவது நாளை அவர் நீதிமன்றத்தில் சரண் அடைவார் என செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், அவரது கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்ததால், வேறு வழியின்றி சுதாகரனும் சரண் அடைவதற்காக நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது..
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments