Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

புரோட்டோ போட்டு வாக்குகள் சேகரித்த தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி

Advertiesment
தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி
, புதன், 16 பிப்ரவரி 2022 (23:22 IST)
வாக்குகள் சேகரிக்கும் போது புரோட்டோ போட்டு வாக்குகள் சேகரித்த தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தமிழக அளவில் நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, அதிமுக, திமுக., பாஜக, தே.மு.தி.க, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமையம் உள்ளிட்ட கட்சிகளுடன் சுயேட்சை கட்சிகளும் போட்டியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட அளவில் களத்தில் தமிழக முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக கட்சிக்கு அடுத்தபடியாக பாஜக பல்வேறு இடங்களில் கரூர் மாவட்ட அளவில் பட்டையை கிளப்புகின்றது. இந்நிலையில், இன்று, கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் வாக்குகள் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் சூறாவளி போல் நடைபெற்றது. கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களோடு மக்களாக கட்டிட வேலை செய்தும் பரோட்டா கடையில் வேலை செய்தும் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி பாஜக விற்கு வாக்குகள் சேகரித்தார். அதே பகுதியில் இவர் மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைகள் குறித்து எடுத்து விளக்கிய போது. பாஜக வேட்பாளர்கள் வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்குகள் சேகரித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகைக்கடன் தள்ளுபடி : நகைகளை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் திரும்பப் பெறலாம்- அமைச்சர் சக்கரபாணி