Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் – காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம் ! மத்திய மண்டல ஐ.ஜி அதிரடி

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (21:00 IST)
தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் –  காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம் ! மத்திய மண்டல ஐ.ஜி அதிரடி
கரூர் மாவட்டம் முதலப்பட்டியில் நிலத்தொடர்பான பிரச்சனையில் தந்தை,  மகன் ஆகிய இருவரை ஆறு பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் கொலை செய்தனர். கொலை செய்த குற்றவாளிகளை கோட்டை விட்ட குளித்தலை போலீஸ் இஸ்பெக்டர் பாஸ்கரை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., வரதராஜூ தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். 
 
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள முதலப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான பலநுாறு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் பார்த்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதை தடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்த ராமர் என்கிற வீரமலை, மற்றும் அவருடை மகன் நல்லதம்பி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நலன் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஆத்திரமடைந்த முதலப்பட்டியை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கடந்த சில தினங்களுக்கு முன் பட்டப்பகலில் ராமர், மற்றும் அவருடைய மகன் நலல்லதம்பியை நடுரோட்டில் சரமாரியாக வெட்டி கொன்றனர். சம்பவ இடத்துக்கு மத்திய மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி., கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திருந்து பார்வையிட்டனர். கொலை குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை போலீஸார் நியமித்தனர். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி  மதுரை நீதிமன்றத்தில் முதலப்பட்டியை சேர்ந்த சவுந்திரராஜன், பிரபாகரன், கவியரசன், சிசிக்குமார், ஸ்டாலின், ஆகியோர் சரணடைந்தனர். தொடர்ந்து கொலை குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் பிடிக்க தவறியதால் குளித்தலை போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., வரதராஜூ தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்திரவிட்டார். இதனால் கரூர் மாவட்ட போலீஸார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை முதலப்பட்டியில் கிராமத்தில் சொற்ப அளவிலான குடும்பங்கம் மட்டுமே தங்கியுள்ளனர். அப்பகுதியில் தொடரந்து போலீஸ் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments