திருச்செந்தூர் கடல் நீர் திடீரென கருப்பாக மாறியதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று புத்தாண்டு தினத்தில் திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்த பக்தர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால் திருச்செந்தூர் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
அப்போது திடீரென அலையின் சீற்றம் அதிகமானதாகவும் சீற்றம் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவு கடல் அரிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டதாகவும் பக்தர்கள் கடற்கரையில் முன்புள்ள படிக்கட்டில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது .
மேலும் கடல் நீர் கடந்த சில நாட்களாக கருப்பு நிறத்தில் காணப்படுவதாகவும் இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததால் கடற்கரை பகுதியில் கடல் பெருக்கு ஏற்பட்டு அடிப்பகுதியில் உள்ள மணல் காரணமாக தண்ணீர் குழம்பிய நிலையில் கருப்பு நிறத்தில் மாறி காணப்படுவதாக உள்ளூர் வாசிகள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.