Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு: அதிரடிக்கு தயாராகும் சு.சாமி!

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (13:50 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விரைவில் ஊழல் வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த திருமண விழா ஒன்றுக்கு வந்திருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் பரஸ்பரம் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டது அபூர்வமாக பார்க்கப்படுகிறது.
 
இந்த சந்திப்பின் போது சுப்பிரமணியன் சுவாமி ஸ்டாலினிடம் சில ரகசியங்கள் சொன்னதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக அரசுக்கு எதிராக தனது அதிரடியை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் அவர் தனது நண்பர் எனவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை பிரதமரிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் ஆளுநர் அனுமதி கொடுத்துவிடுவார் என அவர் தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்