Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெஜெ = ஜெயலலிதாவுக்கு ஜெயில் - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

ஜெஜெ = ஜெயலலிதாவுக்கு ஜெயில் - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
, சனி, 27 செப்டம்பர் 2014 (14:22 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிற்கு முதல் காரணம் சுப்பிரமணியன் சுவாமி. இப்போது பாஜகவில் இருக்கும் இவர் அளித்த புகாரின் பேரில் தான், இந்த வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு வெளியான நாளில் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
 
அதில், ஜெஜெ = ஜெயலலிதாவுக்கு ஜெயில் (Jail for Jayalalitha=JJ) எனத் தெரிவித்துள்ளார்.

webdunia
 
அவரது மேலும் ட்வீட்டுகள் வருமாறு-
 
இப்போது பாருங்கள், ஊழல்வாதிகள்,  வன்முறையை நம்புவார்கள். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், ஊழலுக்கு எதிராகப் போராடுவது நம் தர்மம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
நான் 14/6/96இல் ஒரு கிரிமினல் புகாரைப் பதிவு செய்தேன். முதன்மை அமர்வு நீதிபதி அதனை ஏற்று, ஐபிஎஸ் அதிகாரி லேத்திகா சர்க்காரை விசாரிக்குமாறு பணித்தார். அதன் பிறகு, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, இந்த வழக்கை ஏற்று நடத்த அனுமதி கோரினார். நான் ஒப்புக்கொண்டேன். இப்போது கருணாநிதி, எல்லாவற்றுக்கும் உரிமை கோருவார்.
 
நான் 2ஜி அலைக்கற்றை வழக்கில் வென்றபோது, ஜெயலலிதா அதற்கு உரிமை கோரினார். இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கிற்கும் அவர் உரிமை கோருவாரா?
 
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil