Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது: சுப்பிரமணியன் சுவாமி

Advertiesment
மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது: சுப்பிரமணியன் சுவாமி
, திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:03 IST)
மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது: சுப்பிரமணியன் சுவாமி
மொழியை வைத்து யாரும் நாட்டை பிரிக்க முடியாது என ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
மதுரை தொழில் வர்த்தக சங்கத்தின் விழாவில் சுப்ரமணியசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது, ‘மொழிகளில் தமிழ் தான் முக்கியம் என்றும் இந்தியும் கற்றுக் கொண்டால் என்ன தவறு என்றும் கட்டாயமாக இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை என்றும் இந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஏன் தடை போடுகிறீர்கள் என்றுதான் கேள்வி எழுப்புகிறேன் என்றும் மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்
 
தமிழக அரசின் கையில் 32 ஆயிரம் கோயில்கள் உள்ளன என்றும் அதனை விடுவிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் இதற்கு தமிழக அரசு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
திமுக தினந்தோறும் ஒரு பொய்யை சொல்லி வருகிறது என்றும் அடுத்த சட்டசபையில் ஒரு மாற்று கட்சியாக பாஜக வரும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போன் எப்படி??