Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த 4 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம். ரஜினிக்கு டெஸ்ட் வைத்த உதயகுமாரன்

Advertiesment
, செவ்வாய், 20 ஜூன் 2017 (22:11 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக தகவல் வந்ததும் பெரிய கட்சியான அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் அதனை வரவேற்பதாக அறிவித்தது. ஆனால் மக்கள் மத்தியில் செல்வாக்கே இல்லாத லட்டர்பேடு கட்சிகளும், செல்வாக்கு இல்லாத அமைப்புகளின் தலைவர்களும் கன்னடர் என்ற காரணத்தை கூறி ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்த்து வருகின்றனர்.





இந்த நிலையில் அணு உலைக்கு எதிரான சொதப்பலான போராட்டங்கள் நடத்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்தவரும், மக்கள் செல்வாக்கு இல்லாதவருமான சுப.உதயகுமார் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளார். தான் ஒரு 4 கேள்விகள் கேட்பதாகவும் அதற்கு பதில் கூறினால் தானே ரஜினி கட்சியில் சேர தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் கேட்ட 4 கேள்விகள் இதுதான்:

1.ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ரஜினிகாந்த் சரியாக அடையாளப்படுத்துவாரா?

2. நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?

3. எங்கள் இடிந்தகரை பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடங்கள் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?

4. கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?

மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் சேருவதற்கு நுழைவுத்தேர்வு வைப்பது போல் அரசியலுக்கு நுழைவுத்தேர்வு வைப்பது, அதுவும் மக்கள் செல்வாக்கை இழந்த ஒரு செல்லாக்காசு தலைவர் தேர்வு வைப்பது இந்த வருடத்தின் உச்சபட்ச காமெடி என்று ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது