பிறந்து 9 மாதம் ஆன குழந்தை முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பள்ளிகளில் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவ, மாணவிகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிறந்து 9 மாதம் ஆன குழந்தை முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பள்ளிகளில் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. பெங்களூரில் இந்த தடுப்பூசிக்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தில் ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு வெளியான பின், சமூக வலைதளங்களில் இதற்கு எதிராக கருத்துகள் வைரலாக பரவியது. ஆனால் அரசு சார்பில் இந்த ரூபெல்லா தடுப்பூசி பற்றி பரவும் கருத்துகள் பொய்யானது. இந்த தடுப்பூசி பாதுக்காப்பானது என்று அமைச்சர்கள் முதல் மருத்துவர்கள் வரை பலரும் கூறினர்.
இந்நிலையில் தற்போது இந்த ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேயில் 33 மாணவர்கள், வேலூரில் 3 பேர் என ஆங்காங்கே இந்த ரூபெல்லா தடுப்பூசியால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.