Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது காலாண்டு விடுமுறை.. ஆர்வத்துடன் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள்..!

Siva
திங்கள், 7 அக்டோபர் 2024 (09:48 IST)
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சமீபத்தில் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில், முதலில், காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் இரண்டு வரை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால், காலாண்டு விடுமுறை மிகவும் குறைவாக இருப்பதாகவும், காலாண்டு தேர்வு தாள் திருத்தும் பணிகளுக்குக் கூட இடைவெளி இல்லை என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில், நேற்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்ததால், இன்று காலை மாணவ, மாணவிகள் சென்னை உள்பட அனைத்து ஊர்களிலும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லும் காட்சிகளை பார்க்க முடிந்தது. 
 
மேலும், இன்றைய முதல் நாளிலேயே இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்கள் விநியோகம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.  
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலை ஏற்க மறுத்த குடும்பம்; 13 பேரையும் விஷம் வைத்து கொன்ற பெண்! - சிக்கியது எப்படி?

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.. விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு குறித்து ஈபிஎஸ்..!

விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு: முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும்: அண்ணாமலை..

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு: சிகிச்சையில் 93 பேர்..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

அடுத்த கட்டுரையில்
Show comments