Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கத்தியுடன் கல்லூரிக்கு சென்ற மாணவர் கைது

Advertiesment
கத்தியுடன் கல்லூரிக்கு சென்ற மாணவர் கைது
, செவ்வாய், 5 ஜூலை 2016 (15:39 IST)
சென்னை மாநிலக் கல்லூரிக்கு பட்டா கத்தியுடன் வந்ததாக மாணவர் கைது செய்யப்பட்டார்.


 

 
சென்னை மாநிலக் கல்லூரி சென்னையில் ரவுடிசம் செய்யும் கல்லூரிகளில் ஒன்று. ரகசியமாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் நேற்று கல்லூரியில் சோதனை நடத்தினர்.
 
சோதனையில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் ஹபிபுல்லா(20) என்பவர் அவரது புத்தகத்தில் பட்டா கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
 
கல்லூரிக்கு செல்லும் மானவர்கள் அவர்களை திரைப்படங்களில் வரும் கதாநாயகன் போல் நினைத்து கொண்டு கல்லூரியில் நடந்து கொள்ளும் விதம், செய்யும் சேட்டைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்வது வழக்கம். அதிலும் தற்போது கல்லூரிகளுக்கு மாணவர்கள் புத்தகத்தை எடுத்து செல்ல மறந்தாலும் கத்தியை எடுத்து செல்ல மறப்பதில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் கைதில் சந்தேகம் கிளப்பும் காவல்துறையினரின் நடவடிக்கை