Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியையின் அந்தரங்கத்தை படமெடுத்து மிரட்டிய மாணவன்: திருச்சியில் பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (10:04 IST)
திருச்சியில் பள்ளி ஆசிரியை குளிப்பதை மாணவன் படமெடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் ஜான்சி இவர் நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் இவர் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும்போது ஜன்னல் வழியாக யாரோ தன்னை எட்டிப்பார்ப்பது போல உணர்ந்திருக்கிறார். இதனால் அச்சமடைந்த ஜான்சி சத்தம் போடவே அந்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார்.
 
சமீபத்தில் அவரது வீட்டிற்கு மொட்டைக் கடுதாசி ஒன்று வந்துள்ளது. அதில் நீங்கள் குளிப்பதை நான் வீடியோவாக எடுத்துள்ளேன். நான் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும். யாரிடமாவது இதைப்பற்றி கூறினால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த ஜான்சி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணையை துவங்கிய போலீஸார் ஜான்சி வீட்டின் பக்கத்து வீட்க்கார மாணவனை பிடித்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியது.
 
அதில் ஆசிரியை குளிப்பதை 2 வருடங்களாக மறைந்திருந்து பார்த்தும் அதை வீடியோவாக எடுத்து பார்த்து வந்ததாகவும் அந்த மாணவன் கூறியுள்ளான்.
 
இதையடுத்து போலீஸார் அந்த மாணவனை கைது செய்தனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments