ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடங்கள் புரியவில்லை என்ற மன விரக்தியில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனை அடுத்து ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளால் ஏற்கனவே ஒருசில மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் இணைய வழி பாடங்கள் புரியவில்லை என்று ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர் விக்கிரபாண்டி என்பவர் கூறியுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விக்கிரபாண்டி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே நேற்று ஒரே வீட்டில் 3 மகள்கள் இருந்த நிலையில் அந்த ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருந்ததால் அந்த செல்போன் மூலம் ஆன்லைன் பாடங்களை படிப்பது யார் என்று மூவருக்குள் சண்டை வந்ததால் மூத்த மகள் நித்யஸ்ரீ என்றவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்தது
அடுத்தடுத்த இரண்டு நாட்களில் ஆன்லைன் வகுப்புகளால் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது