பள்ளியில் தகராறு: மாணவனுக்கு கத்திக்குத்து
Publish Date: Thu, 01 Mar 2018 (16:42 IST)
Updated Date: Thu, 01 Mar 2018 (17:10 IST)
பள்ளியில் முன் விரோதம் காரணமாக மாணவன் ஒருவன் சக மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கண்ணன். அதே வகுப்பில் சேன்ஸ்சியோஸ் என்ற மாணவனும் படித்து வருகிறான்.
மாணவன் சேன்ஸ்சியோஸ் வகுப்பில் ஓழுங்கினமாக நடந்து கொண்டதால் கண்ணன் வகுப்பு ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளான். இதில் ஆத்திரமடைந்த சேன்ஸ்சியோஸ், கண்ணனை வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளான். அங்கிருந்தவர்கள் காயமடைந்த கண்ணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்