Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவி கைது

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (11:19 IST)
தமிழக அரசை திரைமறைவில் இருந்து ஆட்டிப்படைப்பது பாஜக தான் என அனைத்து கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கட்டுப்பாட்டில்தான் தமிழக அரசு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் குருமூர்த்தி அளித்த பேட்டியில் தன்னை பார்த்த பின்னர்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார் என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தமிழக அரசை திரைமறைவில் இருந்து இயக்கி, அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக கூறி ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி இன்று முயற்சி செய்தார். இதனை அடுத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நந்தினி பின்னர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவத்தை அடுத்து மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் உள்ள குருமூர்த்தி வீட்டுக்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாணவியின் நந்தினிக்கு நெட்டிசன்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நந்தினியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கஞ்சா, போதை மாத்திரை ஆன்லைனில் விற்பனை: சென்னை பொறியியல் மாணவர்கள் கைது

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்படுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு.. வெள்ளை மாளிகைக்கு திடீர் பாதுகாப்பு அறிவிப்பு..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் முன்னிலை.. கமலா ஹாரிஸ் பின்னடைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments