Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்பார்மிங் கையெழுத்து போட்டது இவரா? - ஜெ.வின் மரணத்தில் விலகும் மர்மங்கள்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (11:18 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை ஆணையம் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

 
ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சை காரணமாக,  ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
அந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உதவியாளர் பூங்குன்றன், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, விவேக், அண்ணன் மகள் தீபா, மாதவன், டிரைவர் ஐயப்பன் உள்ளிடோரிடம் விசாரணை நடத்தியது. மேலும், சசிகலாவிடமிருந்தும் தகவலை பெற்றுள்ளது. 
 
சசிகலா சமர்பித்த பிரமாணப்பத்திரத்தில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியிருந்தார். குறிப்பாக, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாகவே, ஜெ.வின் உடல்நிலை எப்படி பாதிக்கப்பட்டது, ஜெ. மருத்துவமனையில் இருந்த போது  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அமைச்சர் ஓ.பி.எஸ், தம்பிதுரை, சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் அவரை பார்த்தனர் என சசிகலா தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை அல்ல என விசாரணை ஆணையம் கூறியிருந்தது.

 
இந்நிலையில், ஜெ.வின் மரணம் தொடர்பான விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தெரிகிறது. 
 
ஜெ.வின் மரணத்தில் பல விஷயங்களை மூடி மறைக்கும் வேலைகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெ.வின் சிகிச்சை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை. ஜெ.வின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்ததாலேயே அவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு அளவுக்கு அதிகமான ஸ்டீராய்டு மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெ.வின் உடல் நிலையை கவனிக்க 5 அரசு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களை ஒருவரை கூட அப்போலோ நிர்வாகம் அனுமதிக்கவில்லை. 
 
அவர் மரணம் அடைந்த பின் அதற்கான காரணத்தை கண்டறியும் ஆய்வு செய்யப்படவில்லை. மாறாக, அவரது மரணத்துக்கான காரணங்களை மூடி மறைக்கும் வேலைகள் நடந்துள்ளன.  அவர் உடல் என்பாமிங் செய்யப்பட்ட போது அவரது ரத்த சொந்தங்களிடம் கையெழுத்து பெறப்படவில்லை. அதற்கான கையெழுத்தை சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் போட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதை அப்போலோ மருத்துவமனையும் அனுமதித்துள்ளது.
 
இப்படி பல விவகாரங்கள் இந்த விசாரணை மூலம் தெரியவந்துள்ளது எனவும், இது தொடர்பான அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments