Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பனின் வீட்டில் வீடியோகேம் விளையாடச் சென்ற மாணவன் – தலையில் சுடப்பட்டு இறந்த சோகம் !

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (08:53 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனது நண்பனின் வீட்டிற்கு வீடியோகேம் விளையாடசென்ற மாணவன் தலையில் சுடப்பட்டு இறந்த சம்பவம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலூருக்கு அருகே வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவர் முகேஷ். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் வீடியோ கேம் பிரியரான இவர் அடிக்கடி தனது நண்பர் விஜய்யின் வீட்டுக்கு சென்று வீடியோ கேம் விளையாண்டு வந்துள்ளார்.

நேற்றும் வழக்கம் போல முகேஷ் வீட்டுக்கு சென்று விஜய்யுடன் விளையாண்டு கொண்டு இருந்திருக்கிறார். அப்போது விஜய்யின் தம்பி உதயா வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டு இருந்திருக்கிறார். சிறிது நேரத்தில் அங்கே பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது முகேஷ் தலையில் சுடப்பட்டு உயிருக்கு துடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இது சம்மந்தமாக விஜய்யின் சகோதரர் உதயா கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் முகேஷை சுட்ட விஜய் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் மாணவனுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது ? எதற்காக நண்பனை சுட்டுக்கொன்றார் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments