Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர் சக்கரத்தில் சிக்கி பலியான 10-ஆம் வகுப்பு மாணவன்

Advertiesment
தேர் சக்கரத்தில் சிக்கி பலியான 10-ஆம் வகுப்பு மாணவன்
, செவ்வாய், 26 ஜூலை 2016 (17:59 IST)
நாகை மாவட்டம் வேதரண்யம் அருகே கோவில் தேரின் சக்கரத்தில் சிக்கி 10-ஆம் வகுப்பு மாணவன் பலியாகிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கருப்பம்புல சீதாள மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழ நடைபெற்று வருகிறது. இதில் 4-ஆம் நாள் தேர்த்திருவழாவாக கொண்டாடப்பட்டது. நேற்று இரவு 12 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடந்தது.
 
பெரும் கூட்ட நெரிசலில் தேர் வீதி உலா வந்து கொண்டிருந்தது. அப்போது பத்தாம் வகுப்பு படிக்கு 15 வயதான சரவணக்குமார் என்ற மாணவன் தேரின் அருகில் வந்து கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் தேரின் சக்கரத்தில் சிக்கியுள்ளான்.
 
மாணவனின் மேல் தேர் ஏறியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். மாணவனின் மரணம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவின் நெருக்கடியே ராஜினாமாவிற்கு காரணம் : கிரிக்கெட் வீரர் சித்து