தேர்வுத்தாளில் சினிமா பாடலை எழுதிய மாணவன்… ஆசிரியர் கண்டித்ததால் எடுத்த சோக முடிவு!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (09:46 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஒட்டத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (17). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வுகள் தொடங்க உள்ளதால் பள்ளியில் மாணவர்களுக்கான வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மாணவர் கார்த்திக் தாவரவியல் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு சினிமா பாடல்களை பதிலாக எழுதி வைத்துள்ளார். இதைக் கண்டு பிடித்த ஆசிரியர் சகாதேவன், மாணவர்கள் முன் அதைப் படித்துக் காட்டியும், பெற்றோரை அழைத்துதான் வரவேண்டும் என கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக், வீட்டில் இரவில் எல்லோரும் தூங்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments