நீட் தேர்வு ஹால் டிக்கெட் ஐடி…. மறந்ததால் மாணவி எடுத்த சோக முடிவு!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (12:15 IST)
புதுக்கோட்டை அருகே நீட் ஹால் டிக்கெட் ஐடியை மறந்துவிட்டதால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள்,ஹரிஷ்மா. இவர் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். மேலும் மருத்துவர் ஆகவேண்டும் என்ற ஆசையில் நீட் தேர்வுக்காக கடுமையாக படித்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வில் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும் ஹால் டிக்கெட் ஐடி சமீபத்தில் இவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை இவர் மறந்து விட்டதால் இவரால் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய முடியவில்லை. நீட் தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் இருந்துள்ளார். மேலும் அவரது தாயாரும் அவரைத் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான ஹரிஷ்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments