சினிமாவைப் போல அரசியலிலும் விஜய் சாதிக்க வேண்டும் என இன்று நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் கல்வி விழாவில் மாணவி ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்ற கல்வி விழாவில் தமிழகத்தில் உள்ள 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் விஜயன் நேரில் இந்த பரிசுகளை வழங்கினார் என்பதும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாணவ மாணவியரும் சொல்வதை உற்று கவனித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பரிசு வாங்க வந்த மாணவி ஒருவர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு மேடையிலேயே அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவை போல அரசியலிலும் விஜய் சாதிக்க வேண்டும் என்று விஜய் விஜய்க்கு மேடையிலேயே அழைப்பு கொடுத்தார்.
மேலும் தான் செலுத்த போகும் முதல் ஓட்டு விஜய்க்கு தான் என்றும் அந்த மாணவி கூறியவுடன் கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது