Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடும் பஸ்ஸில் ஸ்கேட்டிங் செய்த மாணவன் கைது

Advertiesment
ஓடும் பஸ்ஸில் ஸ்கேட்டிங் செய்த மாணவன் கைது
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (14:34 IST)
ஓடும் பஸ்ஸில் செருப்பு காலால் ஸ்கேட்டிங் செய்த மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக மாணவர்கள் ரயிலிலும், பேருந்திலும் படியில் தொங்கியபடி சாகசம் செய்வதாகக் கூறி வ ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தன.

இதுகுறித்து, பேருந்து,  ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கூறினாலும், ஆசிரியர்கள் கூறினாலும் அதைப் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் நடந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னையில்  சில நாட்களுக்கு முன், தி. நகரில் இருந்து, செம்மஞ்சேரி செல்லும் ஓடும் பேருந்தில் ஒரு பள்ளி மாணவன் , ஜன்னல் கம்மியைப் பிடித்தபடி, செருப்புக் காலாம் ஸ்கேட்டிங் செய்த  மாணவனின் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பிளஸ் 1 மாணவன் இன்று ஒருவன் கைது செய்யப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்எஸ்எஸ் பேரணி செல்வதில் என்ன தவறு: புதுவை ஆளுநர் தமிழிசை