Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

Siva
புதன், 13 நவம்பர் 2024 (14:20 IST)
சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்றும், விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்றும்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன.
 
அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
 
கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
 
கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் திரு. பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலினை  வலியுறுத்துகிறேன்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிண்டி கலைஞர் நூற்றண்டு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து.. ஒருவர் கைது..!

இந்த சமூகத்தில் விவாகரத்து பெற கணவருக்கு லட்சக்கணக்கில் பெண்கள் பணம் கொடுப்பது ஏன்?

திருவொற்றியூர் பள்ளியில் வாயுக்கசிவு விவகாரம்: மாணவிகளின் நாடகமா?

நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டை.. பணிகள் தொடக்கம்..!

தமிழகத்தை நெருங்குகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு: 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments