Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தை கடத்தல் சம்மந்தமான வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை! -மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்

குழந்தை கடத்தல் சம்மந்தமான வதந்திகளை  பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை! -மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்

J.Durai

, வெள்ளி, 8 மார்ச் 2024 (13:49 IST)
கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவது சம்மந்தமாக வதந்திகள் சில விஷமிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த சூழ்நிலையில்
.
 
மேலும், வடமாநிலத்தவர்கள் பிழைப்புக்காக, பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் சமயங்களில், இவர்கள் தெருக்களில் செல்லும் போது, பொது மக்கள் வடமாநிலத்தவர் என்பதால், இவர்கள் குழந்தைகளை கடத்த வந்திருப்பார்கள் எனக்கருதி, அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
 
வடமாநிலத்தவர்கள், மொழி பிரச்சனை காரணமாக, தங்கள் நிலையை கூற இயலாமல் அடி உதைக்கு ஆளாகின்றனர்.
 
இவ்வாறான, தவறான செய்திகளை பரப்புவோர் மீது, கீழ்கண்ட மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை தொடர்ந்து குழந்தை கடத்தல் சம்மந்தமான வதந்திகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ.வருண்குமார் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேட்டது 3.. கொடுத்தது 2.. திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து..!!