Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் இல்லத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல்; மனைவியை பழிவாங்க இப்படியா செய்யணும்?

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (08:44 IST)
சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் இல்ல கட்டுபாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த ஆசாமி ஒருவர் முதலவர் இல்லத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் அதை கண்டுபிடியுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறை அழைப்பு வந்த எண்ணை ட்ரேஸ் செய்த போது அது சேலையூரை சேர்ந்த வினோத் கண்ணன் என்பவரது மனைவியின் எண் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வினோத் கண்ணனின் வீட்டிற்கு நேரடியாக சென்று போலீஸார் வினோத் கண்ணனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது உண்மையை ஒத்துக்கொண்ட வினோத் கண்ணன் தன் மனைவி தனக்கு சோறு போடாமல் பட்டினி போட்டதாகவும், அதற்கு பழிவாங்குவதற்காக மனைவியின் போனிலிருந்து அழைத்து இவ்வாறாக மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். வினோத் கண்ணன் இப்படி செய்வது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டும் இரண்டு முறை முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments