தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
வானிலை ஆய்வு மையம் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டி பகுதிகளில் அடுத்து 12 மணி நேரத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளிலும் சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலும் கூடிய மழை பெய்யும் என்றும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணும் என்றும் சில இடங்களில் மட்டும் மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.