Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக அமைச்சர் மீது கல் வீச்சு: மயிரிழையில் தப்பித்த வெல்லமண்டி நடராஜன்!

அதிமுக அமைச்சர் மீது கல் வீச்சு: மயிரிழையில் தப்பித்த வெல்லமண்டி நடராஜன்!

அதிமுக அமைச்சர் மீது கல் வீச்சு: மயிரிழையில் தப்பித்த வெல்லமண்டி நடராஜன்!
, திங்கள், 27 பிப்ரவரி 2017 (14:53 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மீது மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து பின்னர் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சமிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளித்தனர் 122 எம்எல்ஏக்கள்.


 
 
அதன் பின்னர் தொகுதிக்கு செல்லும் அவர்களை தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டி வருகின்றனர். சில இடங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சிக்கிறார்கள்.
 
சமீபத்தில் மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொதுமக்கள் தாக்க முயன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு அமைச்சரை நோக்கி கல் வீசிய சம்பவம் நடந்துள்ளது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
 
இந்த விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசும்போது கூட்டத்தில் இருந்து மூன்று கற்கள் வந்துள்ளது. அதில் ஒரு கல் அமைச்சரின் கால் அருகே விழுந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட அமைச்சரின் ஆதரவாளர்கள் கல் வந்த திசையை நோக்கி சென்றனர். ஆனால் கல் வீசியவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
தன்னை குறி வைத்து கல் வீசப்பட்டதால் ஆவேசமடைந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எங்களை எப்படி மிரட்டினாலும் சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர் என முழங்கினார். இதனையடுத்து பரபரப்பு தொடர்ந்து நீடித்ததால் அமைச்சர் தனது பேச்சை சீக்கிரமாக முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இந்த கூட்டத்திற்கு 100-க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

16 வருடங்களுக்கு பிறகு நோக்கியா 3310: அசத்தல் வீடியோ!!