சென்னையி வசித்து வந்த காளிதாசன் என்பவர் 42 வயதாகியும் திருமணம் ஆகாததால் தனக்கு வந்த ஒரு போன் காலின்படி சில மாதங்களுக்கு முன்பு வட பழனியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு மணப்பெண்ணை பார்க்க ஆவலுடன் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காளிதாஸை ஒரு பெண் வரவேற்ற பிறகு இரு ஆண்கள் அவரை கடுமையாக தாக்கி அவரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதன் பின் காளிதாஸ் போலிஸாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை துவக்கினர்.
காளிதாஸிடம் அந்த கும்பல் தொலைபேசியில் பேசிய பதிவுகளை ஆராய்ந்த போலீஸார் ஏற்கனவே இதே போன்ற ஒரு கும்பல் கோவையிலும் கைவரிசை காட்டியுள்ளதை கண்டுபிடித்தனர்.
அதன் பின் தீவிரமாக தேடி, குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். அதில் கேரளாவைச் சேர்ந்த சாவித்ரி, அவரது மகன் சிவா,சாவித்ரியின் தங்கை மகன் கோகுல கிருஷ்ணன் ஆகிய 3பேர்தான் காளிதாசஸை தாக்கி செல்போனை பறித்துச் சென்றது விசாரணையில் தெரிந்தது.
போலீசார் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:
முதலில் பேசுபவர்களின் பெயர்,முகவரி எல்லாம் கேட்டுக் கொண்ட பிறாகு அவர்களூடைய பூர்விகம் எல்லாம் விசாரித்த பின் சிவாவும் கோபாலும் காளிதாஸை தாக்கி அலைபேசி மற்றும் பணத்தை பறித்தோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இவரகளுக்கு பின் யாராவது மூல காரணமாக செயல்பட்டார்களா என்றகோணத்தில் போலீஸார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.