Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கழிவுகளை அகற்ற தவறிய ஸ்டெர்லைட் நிர்வாகம் - உச்ச நீதிமன்றம்

sterlite

Sinoj

, வியாழன், 29 பிப்ரவரி 2024 (18:28 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி  வேதாந்தா  நிறுவனம் தாக்கல் செய்த மனுவை  இன்று  உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு  தள்ளுபடி செய்தது.
 
இம்மனு மீது  நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட விதிமீறல்கள் குறித்து  தமிழ்நாடு அரசு பல விவரங்களுடன் தெளிவான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தது.
 
எனவே இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம்,   ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மீண்டும் மிஈண்டும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
 
இதுகுறித்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாவது:

ஆலையில் மீண்டும் மீண்டும் நடந்த விதிமீறல்கள் அது மூடப்பட்டத்தை நியாயப்படுத்தவே செய்கின்றன. 

 
2013 ஆம் ஆண்டு முதல் பல வாய்ப்புகள் கொடுத்தும் கழிவுகளை அகற்ற ஸ்டெர்லைட்  நிர்வாகம் தவறிவிட்டது. 
 
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மக்களின் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. ஆலை தொடர்ந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வந்துள்ளது.
 
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கடமையை முழுமையாக செய்ய அக்கறை காட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
 
ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்கள் பல இருப்பதால், அரசு, உயர் நீதிமன்ற, உரிய முடிவு எடுத்துள்ளது என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டு, ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று உத்தரவிட்டு, அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்பர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர்: ராஜஸ்தான் கல்வியமைச்சர் சர்ச்சை பேச்சு