ஸ்டெர்லைட்டை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் - மத்திய அரசு !!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (12:54 IST)
ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்த நிலையில் சில வருடங்கள் முன்னதாக மூடப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் பல மனுக்களை அளித்து வந்தது.
 
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் பல ஆக்ஸிஜன் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றன. 
 
இதனிடையே, ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் ஒரு நாளைக்கு 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றும், அவசர நிலை கருதி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது. இதற்கு, ஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை குடைந்தால் இதுதான் நடக்கும்!.. நாஞ்சில் சம்பத் ராக்ஸ்!...

நமது சின்னம் விசில்!.. நாட்டை காக்கும் விசில்!.. தவெக தலைவர் விஜய் அறிக்கை!...

உனக்கெல்லாம் மன்னிப்பே இல்ல.. வெட்கமா இல்லயா?!.. சிறைவாசலில் இளைஞர்கள் ஆத்திரம்...

2026 தேர்தலுக்கு விசில் ஊதியாச்சி!.. பிரவீன் சக்ரவர்த்தி டிவிட்!...

தவெகவுக்கு விசில் சின்னம்!.. விசில் சின்னமும்... சில தகவல்களும்!..

அடுத்த கட்டுரையில்
Show comments