Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயார்.. எலெக்‌ஷன் கமிஷன் பதில்

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (14:19 IST)
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்விக்கு மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

3 வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனிடையே மறுவரையறை பணிகள் முடிவடையாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுக வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், “தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா?” மாநில தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது.

இதனை தொடர்ந்து இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. இனி 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகே மறுவரையறை செய்யப்படும் கூறியது

இதனை அடுத்து வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் பிற்பகல் 2 மணிக்குள்ளேயே பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க தயார் என பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments