Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலி நகைகளை அடகு வைத்து வங்கி ஊழியர்களே மோசடி

Advertiesment
போலி நகைகளை அடகு வைத்து வங்கி ஊழியர்களே மோசடி
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (10:54 IST)
புதுக்கோட்டையில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து வங்கி ஊழியர்கள் ரூ.60 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.
 

 
புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கிக் கிளை உள்ளது. இதில், கடந்த ஆண்டில் வெவ்வேறு தேதிகளில் புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரதீபா, விஜி, கார்த்திகேயன், குணசேகரன் உள்ளிட்ட 31 பேர் போலியான நகைகளை அடகு வைத்துள்ளனர்.
 
இந்நிலையில், போலி நகைகளை அடகு வைத்து சுமார் ரூ. 60 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக வங்கியின் கிளை மேலாளர் கோபால கிருஷ்ணன், புதுக்கோட்டையில் உள்ள மாவட்டக் குற்றப் பிரிவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார்.
 
இது தொடர்பாக காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்டோரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் போலியான நகைகளை தாங்கள் அடகு வைக்கவில்லை, தங்க நகைகளைத்தான் அடகு வைத்தோம் எனத் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து வியாழக்கிழமை அன்று வங்கி திறக்கப்பட்டபோது, ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட வாடிக்கையாளர்கள் 31 பேரும் வங்கியை முற்றுகையிட்டனர். போலி நகைகளை அடகு வைக்கவில்லை என அலுவலர்களிடம் முறையிட்டனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
 
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, ”நாங்கள் தங்க நகைகளைத்தான் இந்த வங்கியில் அடகு வைத்தோம். ஆனால், இந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சிவக்குமார் மற்றும் வங்கியின் சில அலுவலர்கள், நாங்கள் தங்க நகைகள் அடகு வைத்தபோது வேறொரு படிவத்தில் எங்களுக்குத் தெரியாமல் எங்களிடமே கையெழுத்துப் பெற்று அதில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளனர். இதை அங்குள்ள கண் காணிப்பு கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டால் தெரிந்துவிடும்” என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் சுவற்றில் மோதி கொன்ற கணவன்