Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம்

Webdunia
திங்கள், 16 மே 2016 (07:37 IST)
தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.
 

 
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
 
மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments