Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் இவர்கள் தான்: தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு

Advertiesment
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் இவர்கள் தான்: தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு
, செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (18:31 IST)
அதிமுகவின் சார்பில் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்யவிருக்கும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது அதிமுக.


 
 
தேர்தல் நேரத்தில் கட்சிகளின் தேர்தல் செலவுகளை கணக்கிடும் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு கட்சியிலும் பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலையும் கேட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஆகும் பிரச்சார செலவும் கட்சிகளின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்யவிருக்கும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள்:-
 
ஜெயலலிதா, மு.தம்பிதுரை, ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி.மகாலிங்கம், டாக்டர் பி.வேணுகோபால், ஏ.அன்வர் ராஜா, பி.குமார், எஸ்.ஆர்.விஜயகுமார், விஜிலா சந்த்தியானந்த், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நாஞ்சில் சம்பத், என்.செல்வராஜ், பு.தா.இளங்கோவன்.
 
நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், குண்டுகல்யாணம், செந்தில், பொன்னம்பலம், எம்.எஸ்.அருள்மணி, கே.ஆர்.சிங்கமுத்து, வையாபுரி, தியாகு, ஆர்.சுந்தரராஜன், ஏ.கே.ராஜேந்திரன், அணுமோகன், மனோபாலா.
 
நடிகைகள் டி.கே.கலா, விந்தியா, வெந்நிறடை நிர்மலா, ஆர்த்தி, நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு, திரைப்பட இயக்குநர்கள் லியாகத் அலிகான், ஆர்.வி.உதயகுமார், பி.சி.அன்பழகன், ஷக்தி சிதம்பரம், கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மல்லையா தனது வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு