Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒண்டிவீரன் சிறப்பு தபால் தலை வெளியீடு!!

ஒண்டிவீரன் சிறப்பு தபால் தலை வெளியீடு!!
, சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:01 IST)
நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.


தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவில் உள்ள பச்சேரி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஒண்டிவீரன் கோவிலில் ஆகஸ்டு 20 ஆம் தேதி (இன்று) வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி நெற்கட்டும்சேவல் கிராமத்தில் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இரண்டு விழாக்களுக்கும் பல்வேறு சமூக மக்களும் மாலை அணிவித்து, மலர் தூவி விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

கொரோனா காரணமாக இந்த நிகழ்வுகளில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்த 144 தடை உத்தரவு செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்றும், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாவை கொண்டாடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ஒண்டிவீரன் தபால் தலை வெளியீடு நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி மற்றும் மத்திய அமைச்சர் முருகன், தமிழிசை, சுற்றுலாத்துறை அமைசசர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயணிகளின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு அளிக்கப்படாது: இரயில்வே துறை உறுதி!