Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் 20 பேர வாங்குனா.. அதிமுக 60 பேரை விலைக்கு வாங்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (15:03 IST)
திமுக கட்சியைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது :
 
அதிமுகவில் உள்ள தொண்டர்கள் தங்களுக்கு பதவி வேண்டும் என்ற எதிர்ப்பார்புகள் இல்லாமல் கட்சி கொடுயை பிடித்துக்கொண்டு ஓட்டுக் கேட்கும் கூட்டமாக அதிமுக உள்ளது. வேலூ தேர்தலில் கே.வி. குப்பத்தில் சிறிது உழைத்திருந்தால் நிச்சயாமக் வெற்றி கிடைத்திருக்கும்.
 
திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக எம்.எல்.ஏக்கள் 20 பேரை விலை கொடுத்து வாங்க நினைத்தால், நாங்கள் 60  திமுக எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்குவோம். அதிமுகவால் ஏற்கப்படாதவர்களைத்தான் திமுகவில் இணைகிறார்கள்.எங்கள் அதிமுக  கட்சியினர் பிறக்கும் பொழுதே, அண்ணாவின் கொடியுடன் பிறப்பவர்கள். அதனால், முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் ஆசைபடக்கூடாது என தெரிவித்தார்.

மேலும், திராவிட இயக்கத்தில் மலர்ந்த ஆன்மிக மலர் அதிமுக. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
சமீபத்தில், முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து, ஸ்டாலின் வெள்ளையறிக்கை கேட்டிருந்தார். அதற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மஞ்சல், பச்சை, அறிக்கையும், வெள்ளறிக்காயும் தருவோம் என கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

வேதனையும் பெருமையும்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

5 நாட்களில் 3,932.86 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. ரூ.9 லட்சம் கோடி வரை இழந்த முதலீட்டாளர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments