Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல் :காங்கிரஸ் ஒரு ஏமாற்று கட்சி... முன்னாள் முதல்வர் மாயாவதி கடும் தாக்கு...

6 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல் :காங்கிரஸ் ஒரு ஏமாற்று கட்சி... முன்னாள் முதல்வர் மாயாவதி கடும் தாக்கு...
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (19:29 IST)
வட இந்தியாவில் காங்கிரஸ்ம் பாஜக,சிவசேனா,  சமாஜ்வாதி, திருணாமுல் காங்கிரஸ், ராஸ்டிரிய ஜனதா ஆகிய கட்சிகளைப் போன்று மிகவும் பிரபலான கட்சி பகுஜன் சமாஜ் கட்சி ஆகும். இக்கட்சியின் தலைவராக  முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளார். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதற்கு, மாயாவதி, காங்கிரஸ் கட்சி ஒரு ஏமாற்றுக் கட்சி என விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜக கட்சியில் இணைந்தனர். இது நாட்டில் முக்கிய பேசுபொருளாக மாறி , முதல்வர் குமாரசாமி தலைமையிலான  அக்கட்சி  ஆட்சியை விட்டு விலகவும் காரணமாக அமைந்தது. அதன் பிறகு எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி தனது பெரும்பான்மையை நிரூபித்து முதல்வராக பதவியேற்றுள்ளார்.
 
இதேபோல், ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். எனவே, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி,  ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக சட்டசபை சபாநாயகர் சி.பி ஜோசியிடம் கடிதம் அளித்துள்ளனர்.
 
ஏற்கனெவே, ராஜஸ்தானில்  அடுத்த இரண்டு மாதங்களில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜகவை வீழ்த்துவதற்காக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மாயவதி முடிவுசெய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில்,இன்று பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தது மாயாவதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தநிலையில், மாயாவதி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸை விமர்சித்து பதிவிட்டுள்ளதாவது : காங்கிரஸ் கட்சி அம்பேத்காரின் சிந்தனைக்கு எதிரான போக்குகொண்டது. அதனால்தான் அம்பேத்கார் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது என என தெரிவித்துள்ளார்.
 
மாயவதியின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும்  கட்சி தாவிய 6 எம்.எல்.ஏக்கள் தக்க பதிலடி தருவார்கள் என காங்கிரஸ் தொண்டர்கள் மாயாவதியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரிகள் ஆக்ரா சிறையில்: கைதுக்கு காரணம் கூட கூறவில்லை என்று உறவினர்கள் வேதனை