Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் லண்டன் சென்றதால்தான் அணை நிரம்பியது: முதல்வர் ஈபிஎஸ் கிண்டல்

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (20:00 IST)
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் லண்டன் சென்றதால்தான் தமிழகத்தில் அணை நிரம்பியுள்ளதாகவும், திமுக ஆட்சியின்போது இதுபோன்ற நல்ல காரியங்கள் எதுவும் நடந்ததே இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலுடன் கூறியுள்ளார்.
 
தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் லண்டன் சென்றிருந்தார். அவர் சென்றதில் இருந்தே கர்நாடக மாநிலத்திலும் தமிழகத்தின் ஒருசில பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இதனையடுத்து கர்நாடகா அணைகள் அனைத்து மிக வேகமாக நிரம்பியதால் தமிழகத்திற்கு சுமார் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழகத்திற்கு ஒருசொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று கூறிய கர்நாடகத்தை வர்ணபகவான் கதறவைத்துவிட்டார்.
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதால்தான் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளது. இத்தனை நாள் நிரம்பாத அணை அவர் லண்டன் சென்றது நிரம்பியுள்ளதாகவும், அவர் இல்லாதபோது தமிழ்கத்தில் பெய்த மழை அவர் தமிழகம் திரும்பியதும் நின்றுவிட்டதாகவும் இதுதான் அவருடைய ராசி என்றும் முதல்வர் குறினார்.
 
மேலும் திமுக ஆட்சியில் இந்த நல்ல விஷயம் எல்லாம் நடந்ததே இல்லை என்று குறிப்பிட்ட முதல்வர், தமிழகத்தில் நல்ல ஆட்சி நடப்பதால்தான், அணை நிரம்பியுள்ளதாகவும், நாளை முதல் பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறினார். முதல்வரின் இந்த பேட்டி திமுகவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments