Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைதியை குலைக்க ஸ்டாலின் முயற்சி! – அதிமுக அமைச்சர் குற்றசாட்டு!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (13:29 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் பேரணி என்ற பெயரில் தமிழகத்தின் அமைதியை குலைக்க முயல்கிறார் என அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. எழும்பூர் தாளமுத்து நடராசர் மாளிகை அருகே தொடங்கிய இந்த பேரணியில் திமுக வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்தது இந்த பேரணி.

குடியுரிமை சட்டம் குறித்து தமிழகத்தினர் கவலைப்பட தேவையில்லை என கூறி வந்த அதிமுகவினர், திமுகவின் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில் திமுகவின் இந்த பேரணி குறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் “அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தின் நிம்மதியை குலைப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் பேரணி நடத்துகிறார்” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments