Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனது இளமை ரகசியம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
தனது இளமை ரகசியம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்
, செவ்வாய், 1 மார்ச் 2022 (19:40 IST)
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள உங்களின் ஒருவன் என்ற சுயசரிதைப் புத்தகத்தை ( பாகம் -1) காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி நேற்று வெளியிடும்போது, முதல்வர் ஸ்டாலினின் இளமைத் தோற்றம் குறித்து பேசினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலளித்துள்ளார்.

 
இதையடுத்து தற்போது  நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் சுயசரிதை உங்களில் ஒருவன் நூலை ராகுல்காந்தி வெளியிட, இதை கேரள முதல்வர் விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சி தலைவர்   தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டனர்.

இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தலைவர்களுக்கு நடிகரும் என்.எல்.ஏவுமான  உதய நிதி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து ராகுல்காந்தி  பேசியதாவது: ஸ்டாலினுக்கு எத்தனை வயதிருக்கும் என எனது தாயார் சோனியா காந்தியிடம் கேட்டேன். அதற்கு அவர்,  ஸ்டாலினுக்கு ஒரு 58 அல்லது 60 வயதிருக்கும் என சொன்னேன்…. அதன்பின், 69 வயதிருக்கும் எனக் கூறினேன். அதை கூகுளில் பார்த்துவிட்டுத்தான் அவர் ஒப்புக்கொண்டார் என உரையாற்றினார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இளமையின் ரகசியத்தை தெரிவித்துள்ளளார்.

அதில், எனது எனக்கு 69 வயது என்று சொன்னால் யாரும்  நம்பமாட்டார்கல். இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் அதனால் அவ்வளவு வயதிருக்காது எனச் சொல்வார்கள்… அதற்குக் காரணம்.. நான் உடல் நலதத்தைப் பேண, முறையாக உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதில் இருந்து, முறையாக சைக்கிளிங் செய்வது போன்ற புகைப்படம் வைரலானது. அதேபோல் அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் அவர்  உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருடன் பேசிய முதல்வர் பசுவராஜ்