அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நீட் விலக்கு போராட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. சட்டமன்ற அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் புறக்கணித்த நிலத்தில் திமுக, காங்கிரஸ் உள்பட 10 கட்சிகள் பங்கேற்றன. மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக, விசிக, மதிமுக, மமக, தவாக, கொமதேக நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் நாம் அனைவர்ம் ஒற்றுமையாக இந்த (நீட் விலக்கு) சமூகநீதிப் போராட்டத்தை நடத்திட வேண்டும். நீட்டுக்கு விலக்குப் பெறும் தமிழக அரசின் முயற்சிக்கு நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று பேசியுள்ளார்.