மதிமுக சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
மதிமுக சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிதாமகன் அறிஞர் அண்ணாவின் 110 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் ’ வெவ்வேறு வீட்டில் இருந்தாலும் நாம் ஒரு தாய் மக்கள். அந்த தாயாக இருப்பது அறிஞர் அண்ணா. பிரிந்து கிடக்கும் தமிழர்களை இணைக்கும் சில சொற்கள் உண்டு. அத்தகைய சொற்களாக தமிழன், திராவிடம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியவை உள்ளன.
நாம் வேறு வேறு இயக்கங்களில் இருந்தாலும், கொள்கையில் ஒன்றாக நிற்கிறோம், நிற்போம். அதனால்தான் இன்று நான் மதிமுக மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். திமுக மேடையில் அண்ணன் வைகோ நின்று கொண்டிருக்கிறார்’ எனக் கூறினார்.