ஸ்டாலின் பதற்றமாகவே பேசுகிறார்: தமிழிசை விளாசல்!
ஸ்டாலின் பதற்றமாகவே பேசுகிறார்: தமிழிசை விளாசல்!
திமுக பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் சமீபகாலமாகவே பேசுகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரின் வேட்புமனுத்தாக்கலுக்கு வந்த அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது காவிரி மேலான்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோது அதற்கு எதிராக மனு தாக்கல் செய்த பாஜக அரசு, அதே நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை உத்தரவு போட்டபோது, அமைதியாக இருந்தது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறாரே என தமிழிசையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், அது வேறு, இது வேறு. காவிரி விவகாரத்தில் உடனே மேலான்மை வாரியம் அமைக்க முடியாது, சிறிது காலமாகும் என்றுதான் சொன்னார்கள். இதில் சுப்ரீம் கோர்ட் ஆர்டராக போடவில்லை, ஒரு நோடிபிகேஷன் தான் கொடுத்தார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு வழக்கில் ஆர்டர் போட்டார்கள். அதில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாத நிலை. இரண்டு விஷயமும் வேறு. இது புரியாமல் ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். சமீபகாலமாக ஸ்டாலின் பதற்றமாகவே பேசுகிறார் என்றார் அதிரடியாக.