Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி ஒரு புரோக்கர்: ஸ்டாலின் காட்டம்

மோடி ஒரு புரோக்கர்: ஸ்டாலின் காட்டம்
, சனி, 29 டிசம்பர் 2018 (15:50 IST)
அ.தி.மு.க வை பிரித்து கட்டப்பஞ்சாயத்து செய்து ஒரு அரசியல் புரோக்கர் வேலை போல தானே பிரதமர் மோடி செய்துள்ளார் என்று கரூரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.
கரூர் அடுத்த திருமாநிலையூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாற்றுக்கட்சியினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் நிர்வாகிகள் மீண்டும் தாய்க்கழகமான தி.மு.க வில் இணையும் விழா சிறப்பாக நடைபெற்றது. ஒரு மாநாடு போல நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற வருகை தந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் இருந்தாலும், மாநிலத்தில் ஆளுகின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கமாக இருந்தாலும் சரி, ஒரு ஆளக்கூடிய தகுதி இல்லாத நிலையில் தான் உள்ளனர். ஆகவே, சினிமாவில் வரும் டயலாக் போல, நீங்கள் (மாற்றுக்கட்சியினர்) லேட்டாக வந்தாலும் சரி லேட்டஸ்ட்டாக வந்துள்ளீர்கள், ஆகவே ஆங்காங்கே ஒட்டைகள் விழுந்துள்ளன, அதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

ஆகவே தற்போது மோடி கேட்கின்றார் தி.மு.க மற்றும் காங்கிரஸ்கட்சியின் கூட்டணி ஒரு கொள்கை கூட்டணியா ? என்று கேட்டுள்ளார். நான் (தி.மு.க மு.க.ஸ்டாலின்) கேட்கின்றேன், அம்மையார் ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு ஒ.பி.எஸ். – இ.பி.எஸ் என்று பிரித்து பின்னர் கட்டப்பஞ்சாயத்து செய்த நிலையில் ஒரு பாரத பிரதமர் செய்யக்கூடிய வேலையா இது ? ஒரு அரசியல் புரோக்கர் செய்யக்கூடிய வேலை என்று பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுமக்கள் விரும்பிய சேனல்களை தேர்ந்தெடுக்க கால அவகாசம் ஜன.31வரை நீட்டிப்பு!