காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஸ்டாலின்: அறிக்கை வெளிவருமா?

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (22:16 IST)
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என இன்று மாலை மருத்துவமனையின் நிர்வாகத்திடம் இருந்து அறிக்கை வெளீயானது.
 
இதனால் திமுக தொண்டர்கள் கடந்த சில மணி நேரங்களாக காவேரி மருத்துவமனை முன் குவிந்து வருகின்றனர். மேலும் திமுக எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் சென்னை திரும்பி கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சற்றுமுன்னர் காவேரி மருத்துவமனையில் இருந்து மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.
 
மு.க.ஸ்டாலின் வீடு திரும்பியுள்ளதால் திமுக தலைவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என திமுக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் இன்னும் சில நிமிடங்களில் மு.க.ஸ்டாலினிடம் இருந்து நம்பிக்கையான அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments