அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மக்களவைத் தேர்தலுக்குப் பின் தனது முயற்சியை கைவிட்டு விட்டதாக கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் எம்.எல்.ஏ தனியரசு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் கலந்துகொண்ட போது தெரிவித்தார்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவின் அணுகுமுறை மாறிவிட்டதாகவும், பாஜக - அதிமுக கூட்டணி சுமூகமாக இருக்கும் நிலையில் இந்த ஆட்சியை எளிதாக கவிழ்க்க முடியாது என்கிற மனநிலைக்கு மு.க.ஸ்டாலின் வந்துவிட்டார் என்றும் தனியரசு எம்எல்ஏ அந்த விவாதத்தின்போது தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழுத்து விடலாம் என்ற நம்பிக்கையை முக ஸ்டாலின் அவர்களுக்கு இருந்ததாகவும், ஆனால் தேர்தலுக்குப் பின் மத்தியில் ஒரு வலுவான பாஜக ஆட்சி அமைந்த பின்னர் அந்த கட்சியின் கூட்டணி கட்சியான அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது என்பது முடியாத காரியம் என்று ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக தனியரசு எம்.எல்.ஏ மேலும் தெரிவித்தார்