மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக பல அரசுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பதை அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பட்ஜெட் குறித்து நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியபோது தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து லாலிபாப் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றும் பட்ஜெட் இது என்று விமர்சனம் செய்திருந்தார்
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் அரசியலில் ஸ்டாலின் இன்னும் பேபிதான் என்பதை அவரது விமர்சனம் காட்டுவதாகவும் பட்ஜெட்டை லாலிபாப் உடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்வதுதான் ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
அரசியலில் லாலிபாப் பேபி ஸ்டாலின் தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது