Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது- முதல்வர் விமர்சனம் !

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (20:05 IST)
ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது- முதல்வர் விமர்சனம் !

விசித்திர விவசாயி என என்னை ஸ்டாலின் பாரட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நான் ஒரு விசித்திர விவசாயிதான் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 
சேலத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர்  பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது :
 
அதிமுக அரசு திட்டங்களில் எதேனும் குறைகள் இருந்தால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்லட்டும். பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவிப்பேன் என ஸ்டாலின் எதிர்ப்பார்க்கவில்லை. சேலத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டடுக்கு மேம்பாலம் இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்படும் என தெரிவித்தார்.
 
மேலும், விவசாய என்றால் என்னவென்றே ஸ்டாலினுக்கு தெரியாது. ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைப்படுத்த வேண்டாம் என தெரிவித்தார்.
 
காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் பெற்று தமிழக அரசுஅரசிதழில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments