Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயபாஸ்கர் பதவி நீக்கம் கோரும் ஸ்டாலின்: அதிரடி அரசியல்!!

Advertiesment
விஜயபாஸ்கர்
, வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (15:10 IST)
வருமானவரித்துறையின் சோதனையில் சிக்கிய விஜய பாஸ்கரை அமைச்சர் பதவியிலிருத்து நீக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


 
 
தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. பணப்பட்டுவாடா தொடர்பாகவே சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், வருமான வரித்துறை சோதனையால் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு நேர்ந்துள்ளது. சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜய பாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுருத்தியுள்ளார். 
 
மேலும், சோதனைகள் பற்றிய விபரத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரத்குமார் வீட்டில் ரெய்டு நடக்க இது தான் காரணமாம்: அவரே சொல்றார் கேளுங்க!